உலக கழிப்பறை தினம்
கிருஷ்ணகிரி, நவ. 20-
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஊராட்சி, தாசிரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உலக கழிப்பறை தினத்தையொட்டி, ஊரக துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில், உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, மாவட்ட கலெக்டர் சரயு உறுதிமொழியை வாசிக்க, மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஏற்றனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சரயு, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் சுகாதார பெட்டகத்தை வழங்கி பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4,09,725 குடியிருப்புகள் உள்ளன. இதில் அனைத்து குடியிருப்புகளிலும் கழிப்பறை உள்ளது என்பதை உறுதிபடுத்தி, பொதுமக்கள் அனைவரும் கழிப்பறையை பயன்படுத்துவற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, 'நமது கழிப்பறை நமது பெருமிதம்' என்ற தலைப்பில் இன்று துவக்கி வைக்கப்பட்டு, வரும் டிச., 10 வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது,'' என்றார்.
உதவி திட்ட அலுவலர் முருகேசன், பி.டி.ஓ.,க்கள் சிவப்பிரகாசம், செல்லக்கண்ணாள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

