ADDED : ஜன 22, 2025 01:32 AM
மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்
ஓசூர்,:ஆந்திர மாநிலத்தை போன்று, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை, 15,000 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும். துறை மூலமே அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 4 மணி நேரம் வேலை என்ற பழைய நிலையை தொடர வேண்டும். அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்
திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன் அஞ்செட்டி சாலையில், வட்ட தலைவர் முனிராஜ் தலைமையில், நேற்று காலை சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில், 40க்கும் மேற்பட்டோரை தேன்
கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். அதேபோல், சூளகிரி ஒன்றிய அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட, 70 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.
* போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகம் எதிரில் தர்மபுரி - திருப்பத்துார் சாலையில், மாற்றுத்திறனாளிகள், 100க்கும் மேற்பட் டோர் மாவட்ட செயலாளர் பெரிய
சாமி தலைமையில் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடத்தினர். அவர்களை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
* ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் முன், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட, 80 பேரை, ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர்.