/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தை அமாவாசையில்பித்ருக்களுக்கு தர்ப்பணம்
/
தை அமாவாசையில்பித்ருக்களுக்கு தர்ப்பணம்
ADDED : ஜன 30, 2025 01:28 AM
தை அமாவாசையில்பித்ருக்களுக்கு தர்ப்பணம்
கிருஷ்ணகிரி:தை அமாவாசையான நேற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலுள்ள நந்திவாயில் வரும் நீரில், பொதுமக்கள் குளித்தும், பெண்ணேஸ்வர மடம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்தும், எள்ளும் தண்ணீரும் ஊற்றி தர்ப்பணம் கொடுத்து, தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.
பின்னர் வீட்டில் முன்னோர்களுக்கு படைத்து, பசுமாட்டுக்கு கீரை மற்றும் அரிசி கலந்த உணவை வழங்கி வழிபட்டனர். இதே போன்று நேற்று, மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். மேலும், மாரியம்மன் கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

