/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயிகளின் தரவுகள்சேகரிக்கும் முகாம்
/
விவசாயிகளின் தரவுகள்சேகரிக்கும் முகாம்
ADDED : பிப் 13, 2025 01:24 AM
விவசாயிகளின் தரவுகள்சேகரிக்கும் முகாம்
ஓசூர்:ஓசூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும், வேளாண் அடுக்கு திட்டத்தில், விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் முகாம் வரும், 18ம் தேதி வரை நடக்கிறது. இதில், விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இனி வரும் காலங்களில், அரசுகளின் அனைத்து திட்ட பயன்களும், அதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். ஓசூர் வட்டாரத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும், தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாமில், தங்களது நில உடைமை ஆவணங்களான பட்டா, சிட்டா, ஆதார் அட்டையுடன் இணைந்த மொபைல் எண் மற்றும் பிற ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

