/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இளநிலை உதவியாளராகதேர்வானவர்களுக்கு வாழ்த்து
/
இளநிலை உதவியாளராகதேர்வானவர்களுக்கு வாழ்த்து
ADDED : பிப் 28, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளநிலை உதவியாளராகதேர்வானவர்களுக்கு வாழ்த்து
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட, 'குரூப் - 4' தேர்வில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 பேர் தேர்வாகினர். கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட, 10 பேரும் கலெக்டர் தினேஷ்குமாரை நேற்று சந்தித்து, பணி நியமன ஆணைகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஓசூர் சப் - கலெக்டர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமஜெயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.