ADDED : மார் 06, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., தெருமுனை பிரசாரம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலையையொட்டி, தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறும் வகையில், தலைமை உத்தரவுப்படி, தெருமுனை பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு கந்திகுப்பம், கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை பகுதிகளில் நடந்த தெருமுனை பிரசாரத்தில், தி.மு.க., நிர்வாகிகள் பேசினர். வாரத்தில் இரு நாட்களில், தொகுதி வாரியாக தெருமுனை பிரசாரம் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.