ADDED : மார் 07, 2025 02:16 AM
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
போச்சம்பள்ளி,:கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளியில், புளியம்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, பாளேதோட்டம், வலசகவுண்டனுார் உள்ளிட்ட, 11 பஞ்.,களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோருக்கு, ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாளையொட்டி நேற்று, அ.தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமையில், 10 பெண்களுக்கு தையல் இயந்திரம், 10 பேருக்கு அயர்ன் பாக்ஸ், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 3 சக்கர சைக்கிள் மற்றும் 650 பெண்களுக்கு புடவை, 450 ஆண்களுக்கு வேட்டி என மொத்தம், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம், ஒன்றிய செயலாளர் ஜெயபால், துாயமணி, திருமால் உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.