/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
/
அரசு மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : மார் 19, 2025 01:33 AM
அரசு மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், தொல்லியல் மரபு மன்றம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொல்லியல் ஆதாரங்கள் என்ற தலைப்பில், நேற்று ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
வரலாற்று துறைத்தலைவர் கனகலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். மாணவியருக்கு கட்டுரை, பேச்சு மற்றும் குறும்படம் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவியரில், தனி நபர் மற்றும் குழுக்களுக்கு ஓய்வு பெற்ற அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். கல்லுாரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் சவுபாக்யா, ரம்யா மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.