/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டாய திருமணத்தால்சிறுமி தற்கொலை;இருவருக்கு 'போக்சோ'
/
கட்டாய திருமணத்தால்சிறுமி தற்கொலை;இருவருக்கு 'போக்சோ'
கட்டாய திருமணத்தால்சிறுமி தற்கொலை;இருவருக்கு 'போக்சோ'
கட்டாய திருமணத்தால்சிறுமி தற்கொலை;இருவருக்கு 'போக்சோ'
ADDED : மார் 20, 2025 01:27 AM
கட்டாய திருமணத்தால்சிறுமி தற்கொலை;இருவருக்கு 'போக்சோ'
மாரண்டஹள்ளி:பென்னாகரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு, 17 வயதில் மகள், 16 வயதில் மகன் இருந்தனர்.
குடும்ப தகராறில் தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். தாயுடன், 17 வயது மகள் வசித்தார். இந்நிலையில் கடந்த, 10ல், சிறுமியை மாரண்டஹள்ளியை சேர்ந்த, தாமோதரன், 29, என்பவருக்கு சிறுமியின் தாய் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதில் விரக்தியடைந்த சிறுமி, நேற்று முன்தினம் வீட்டிலுள்ள உத்திரத்தில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடம் சென்று, சிறுமியின் சடலத்தை மீட்டு, சிறுமியின் தாய் மற்றும் கணவரை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.