ADDED : மார் 30, 2025 01:22 AM
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா
ஓசூர்:ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள சூடவாடி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் பவுன்துரை வரவேற்றார். உதவி ஆசிரியை இந்திராராணி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவியரின் பேச்சு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர்கள் சதீஷ்குமார், ராஜூ, பயாஸ், மேற்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் நாகராஜ், கணக்கு குழு தலைவர் பார்வதி, கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜூ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
கெலமங்கலம் ஒன்றியம், கோட்டை உளிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, தலைமையாசிரியர் அரவிந்தகுமார் தலைமையில் நடந்தது. முன்னாள் பஞ்., தலைவர் நாராயணசாமி, சமூக சேவகர் சிவக்குமார், ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லுார்துசாமி, அந்தோணிசாமி ஆகியோர், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர். உதவி
ஆசிரியர் ராஜேந்திரய்யா நன்றி கூறினார்.