/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 02, 2025 01:32 AM
விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று காலை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணு தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பழி வாங்கக்கூடாது. குறைந்த பட்சம் ஆண்டிற்கு, 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். காந்தி கிராம வேலை வாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிக்கு விரிவு படுத்த வேண்டும். வேலை செய்த அனைவருக்கும், வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கும் சேர்த்து, கூலி பாக்கியை சட்டப்படி வட்டியோடு வழங்க வேண்டும். வேலை நாட்களை குறைக்கக்கூடாது. ஒரு நாள் ஊதியத்தை, 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டை குறைக்காமல் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். பெரும் பணக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு, ஏழைகளின் வயிற்றில் அடிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சக்கரவர்த்தி, துணைச்செயலாளர் சின்னசாமி, அகில இந்திய கிசான் சங்க, மாவட்ட செயலாளர் சேகர், தலைவர் சிவராஜி, செயலாளர் பழனி உள்பட பலர் பங்கேற்றனர்.
விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத்தலைவர் சிவநாதன் நன்றி கூறினார்.