ADDED : ஏப் 02, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தம்பியை கொன்ற அண்ணன் கைது
தளி:தளி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நக்கலய்யா, 36. தனியார் நிறுவன ஊழியர்; இவரது அண்ணன் சின்னைய்யா, 38. நக்கலய்யாவின் குழந்தைகளை சின்னைய்யா திட்டியுள்ளார். இதை நக்கலய்யா தட்டி கேட்டபோது, இருவருக்கும் கடந்த, 29 ல் குடிபோதையில் வார்த்தை தகராறு ஏற்பட்டது.
அப்போது, யானை தந்தம் கடத்தல் வழக்கில் கர்நாடகா போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து ஜாலியாக சுற்றுகிறாயா, உன்னை போலீசாரிடம் மாட்டி விடுவேன் என, அண்ணனிடம், நக்கலய்யா கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த சின்னைய்யா கடந்த, 30 மதியம் வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பி நக்கலய்யாவை கழுத்தில் அரிவாளால் வெட்டி கொன்றார். தலைமறைவாக இருந்த சின்னைய்யாவை, தளி போலீசார் நேற்று கைது செய்தனர்.

