/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்பரவலாக சாரல் மழை
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்பரவலாக சாரல் மழை
ADDED : ஏப் 04, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்பரவலாக சாரல் மழை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்ததால், பொதுமக்கள் வெப்பத்தில் தவித்து போயினர். இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. காலை, 10:00 மணியளவில் வேப்பனஹள்ளி, சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், ஓசூர் மத்துார், போச்சம்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை, 10:30 மணி முதல் சாரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால், வெப்பம் குறைந்து குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

