/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பீர்க்கன்காய் தோட்டத்தை சேதப்படுத்திய யானைகள்
/
பீர்க்கன்காய் தோட்டத்தை சேதப்படுத்திய யானைகள்
ADDED : ஏப் 08, 2025 01:53 AM
பீர்க்கன்காய் தோட்டத்தை சேதப்படுத்திய யானைகள்
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப் படுத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு வனத்தில் இருந்து வெளியேறிய, 3 யானைகள், தளி அருகே ஆருப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாயி ராமகிருஷ்ணாரெட்டி, 36, என்பவரது நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலி கற்களை சேதப்படுத்தி நிலத்திற்குள் புகுந்தன.
அங்கு, 2 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பீர்க்கன்காய் தோட்டத்திற்குள் புகுந்து, பயிர்களை சேதப் படுத்தின. விவசாயிகள் விரட்டியதால் மீண்டும் வனப்பகுதி நோக்கி யானைகள் சென்றன.
இது தொடர்பாக வனத்துறையிடம் விவசாயி புகார் செய்த நிலையில், சரியான பதிலளிக்கவில்லை. அதனால் பயிரை இழந்த விவசாயி மனமுடைந்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.
யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.