/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தக்காளி விலை சரிவுவிவசாயிகள் வேதனை
/
தக்காளி விலை சரிவுவிவசாயிகள் வேதனை
ADDED : ஏப் 08, 2025 01:54 AM
தக்காளி விலை சரிவுவிவசாயிகள் வேதனை
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, காரப்பட்டு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால், ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். ஊத்தங்கரை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ, 3 முதல் 5 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் அறுவடை செய்யும் கூலி கூட இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
அறுவடை கூலி கூட கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டு விடுவதாக வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் தக்காளி செடிகளை சருகு நோய் ஒரு புறம்தாக்கி வருகிறது. இதனால் தக்காளி செடியிலேயே வெதும்பி வருகிறது. ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணை அருகே உள்ள சத்யா நகர் பகுதியில், சருகு நோய் தாக்குதலால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.