/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளிகளுக்கான வகுப்பறைகள்காணொளியில் முதல்வர் திறப்பு
/
பள்ளிகளுக்கான வகுப்பறைகள்காணொளியில் முதல்வர் திறப்பு
பள்ளிகளுக்கான வகுப்பறைகள்காணொளியில் முதல்வர் திறப்பு
பள்ளிகளுக்கான வகுப்பறைகள்காணொளியில் முதல்வர் திறப்பு
ADDED : ஏப் 12, 2025 01:41 AM
பள்ளிகளுக்கான வகுப்பறைகள்காணொளியில் முதல்வர் திறப்பு
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், தண்டரை பஞ்.,க்கு உட்பட்ட கொரட்டகிரி, தண்டரை, சாரகப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட குருபட்டி மற்றும் ஓசூர்
ஒன்றியம், நாகொண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட இடையநல்லுார், முகளூர் பஞ்., டி.பாரந்துார் ஆகிய கிராமங்களில் உள்ள, நான்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் தலா, 32.80 லட்சம் ரூபாய் மதிப்பில், குழந்தை நட்பு பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் தலா இரு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல், தொரப்பள்ளி கிராமத்தில், 73 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நான்கு வகுப்
பறைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய கட்டடங்களில் மாணவ, மாணவியருக்கான வகுப்பறைகள் செயல்பட துவங்கின.