/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஜ்ரங்தள் நிர்வாகி மறைவிற்கு அஞ்சலி
/
பஜ்ரங்தள் நிர்வாகி மறைவிற்கு அஞ்சலி
ADDED : மே 05, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கர்நாடகா மாநிலம், மங்களூருவில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின், பசு பாதுகாப்பு அமைப்பாளர் சுஹாஷ்செட்டி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
அவரது மறைவிற்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காந்தி சிலை அருகே, அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பங்ரங்தள் மாநில அமைப்பாளர் கிரண் தலைமையில், மாவட்ட அமைப்பாளர் லோகேஷ் மற்றும் கோட்ட பொறுப்பாளர்கள் தேவராஜ், கிருஷ்ணா, மாவட்ட தலைவர் சாந்தகுமார், சந்தீப், மஞ்சு, ராமகிருஷ்ணன், சுதாகர் உட்பட பலர், மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

