ADDED : ஆக 24, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி இ.கம்யூ., கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவுக்கு, பர்கூரில், இ.கம்யூ., கட்சி செயலாளர் பரமசிவம் தலைமையில், அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது.
இதில், மாவட்ட விவசாய சங்கத்தலைவர் கண்ணு, வட்ட துணை செயலாளர் பூபேஷ், வட்ட பொருளாளர் வீரபத்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மோகன், தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு, சுதாகர் ரெட்டியின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

