/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
/
தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
ADDED : அக் 21, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் நேற்று தீபாவளி பண்டிகையை, மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இரவு மத்தாப்பு, தரைச்சக்கரம், புஷ்வானம்
கொளுத்தியும், தங்கள் வீடுகளில் செய்த இனிப்புகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கினர்.
தீபாவளியான நேற்று கிருஷ்ணகிரி ராசுவீதி சந்திர மவுலீஸ்வரர் கோவில், பழையபேட்டை சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தங்கள் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டனர். கே.தியேட்டர் ரோடு, ஆனந்த் தியேட்டர் ரோடு, சேலம்ரோடு, உள்ளிட்ட கடைவீதிகளில் மக்கள் கூட்டம் பட்டாசு, ஜவுளி எடுக்க நேற்றும் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் போலீசார்
கண்காணிப்பில் ஈடுபட்டனர்.