/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரியில் 1.15 லட்சம் வாக்காளர் பெயர் இருமுறை பதிவு ஒப்புதல் கடிதத்துடன் நீக்க நடவடிக்கை
/
கி.கிரியில் 1.15 லட்சம் வாக்காளர் பெயர் இருமுறை பதிவு ஒப்புதல் கடிதத்துடன் நீக்க நடவடிக்கை
கி.கிரியில் 1.15 லட்சம் வாக்காளர் பெயர் இருமுறை பதிவு ஒப்புதல் கடிதத்துடன் நீக்க நடவடிக்கை
கி.கிரியில் 1.15 லட்சம் வாக்காளர் பெயர் இருமுறை பதிவு ஒப்புதல் கடிதத்துடன் நீக்க நடவடிக்கை
ADDED : அக் 04, 2024 01:21 AM
கி.கிரியில் 1.15 லட்சம் வாக்காளர் பெயர் இருமுறை பதிவு
ஒப்புதல் கடிதத்துடன் நீக்க நடவடிக்கை
கிருஷ்ணகிரி, அக். 4-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாக்காளர்களின் முகவரி, வாக்காளர் பட்டியலில் பலமுறை இடம்பெற்றுள்ளதை கண்டறிந்து, ஒப்புதல் கடிதத்துடன் அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரும், 2025ம் ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, 2025, ஜன., 6ல் வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதன், ஒரு பகுதியாக மாவட்டத்திலுள்ள, 16,36,728 வாக்காளர்களை வீடு வீடாக சென்று கணக்கெடுத்து சரிபார்க்கும் பணியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகளை பின்பற்றி ஓரே ஓட்டுச்சாவடியில், ஒரே பாகத்தில் 1,337 வாக்காளர்களும், ஒரே சட்டசபை தொகுதியில், 1,055 வாக்காளர்களும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதியிலும் 1,13,174 வாக்காளர்கள் என மொத்தமாக, 1,15,566 வாக்காளர்கள், ஒரே பெயரிலும், ஒரே வயது, உறவு முறை பெயர் என, ஒத்த நபர்களாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 1,15,566 வாக்காளர்களுக்கும் அவர்களது முகவரி வாக்காளர் பட்டியலில் பலமுறை இடம்பெற்றுள்ளது குறித்தும், அதில் எந்த விபரம் சரியானது என்பதற்கான ஒப்புதல் கடிதமான, 'படிவம் ஏ' பதிவஞ்சலில், தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர், ஆர்.டி.ஓ., மூலம் அனுப்பப்படும். விளக்க கடிதம் குறித்து வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி, அதில் தெரிவிக்கப்பட்ட விபரங்களில் எது சரியானது என்பதை தேர்வு செய்து, தொடர்புடைய ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
வாக்காளர்களால் அனுப்பப்படும் மறு ஒப்புதல் கடிதம் அடிப்படையில், தொடர்புடைய இருமுறைப்பதிவு பெயர்களில், ஒரு பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து, நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.