/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை மட்டத்திற்கு மேல் 2 அடி உயரத்தில்கட்டிய கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்

ADDED : ஏப் 11, 2025 01:27 AM
சாலை மட்டத்திற்கு மேல் 2 அடி உயரத்தில்கட்டிய கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்
கிருஷ்ணகிரி:'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, காவேரிப்பட்டணத்தில் சாலை மட்டத்திற்கு மேல், 2 அடி உயரத்தில், கழிவுநீர் கால்வாய் அமைக்க, கான்கிரீட் போட்ட பகுதிகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாததால், பல இடங்களில் கழிவுநீர் சாலையில் ஓடியும், மழைக்காலங்களில் மழைநீருடன் கலந்தும் சாலையில் ஓடியது. பொதுமக்கள் புகாரால் தாழ்வான பகுதிகளில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, 10வது வார்டு ஜின்னா தெருவில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முதல், பஸ் ஸ்டாண்ட் வரை, 1.14 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பணிகள் நடந்து வருகிறது.
ஜின்னா தெருவில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கடைகள், வீடுகள் உள்ள பகுதியில், சரிவர குழி தோண்டாமல், சாலை, வீடுகள் மட்டத்திற்கு, 2 அடிக்கு உயரத்திற்கு மேல் கான்கிரீட் போட்டு கழிவுநீர் கால்வாய் கட்டினர்.
இது குறித்து நேற்று நம், 'காலைக்கதிர்' நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து விழித்துக் கொண்ட காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., நிர்வாகம், இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கூறி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் போடப்பட்ட கான்கிரீட்டை பொக்லைன் மூலம் இடித்து அகற்றியது. அப்பகுதியில் பொக்லைன் மூலம், 4 அடிக்கு பள்ளம் தோண்டி, சாலை, வீடுகள் மட்டத்திற்கு, கழிவுநீர் வெளியேறும் வகையில் தற்போது, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.