ADDED : ஜன 24, 2025 01:36 AM
3 மொபட் திருடிய மூவர் கைது
ஓசூர், : : தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணன், 43, விவசாயி. இவர் தன் வீட்டின் முன் குடும்பத்தினர் பயன்படுத்தும் ஸ்கூட்டர்களை நிறுத்துவது வழக்கம். கடந்த, 18 இரவில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த, 2 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். அதேபோல கடந்த, 20ல், தேன்கனிக்கோட்டை ஒசஹள்ளியை சேர்ந்த விவசாயி ராஜப்பா, 66 என்பவரின் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஒரு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் திருடு போனது. இவர்கள் புகார் படி தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்தனர். அதில், ஸ்கூட்டர் திருட்டில் ஈடுபட்டது, தேன்கனிக்கோட்டை, தேர்பேட்டை நவீன்குமார், 19, நாகனுார் நகீம், 20, சிவனேப்பள்ளி ஹரிஷ்குமார், 27 என தெரிந்தது. அவர்கள் மூவரையும், நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

