ADDED : பிப் 19, 2025 01:35 AM
முதியவர் உள்பட 3 பேர் மாயம்
ஈரோடு:ஈரோடு, மாமரத்துபாளையம், பாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவரத்தினம், 67; கடந்த, 14ம் தேதி மதியம் கடைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. மகன் மகேந்திரன் அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார், முதியவரை தேடி வருகின்றனர்.
* கரூர் அருகேயுள்ள அய்யம்பாளையம் ராம்குமார் மகள் வேல்விழி, 18; தனியார் கல்லுாரி நர்சிங் மாணவி. ஈரோட்டில் ஒரு மருத்துவமனையில் தங்கி பயின்று வந்தார். கடந்த, 15ம் தேதி வீட்டுக்கு வருவதாக கூறிய வேல்விழி செல்லவில்லை. தாய் ஆனந்தி அளித்த புகாரின்படி சூரம்பட்டி போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.
* ஈரோடு, அருண் வேலவன் நகரை சேர்ந்த, நிஜாமுதீன் மகள் பாத்திமா மெகராபின், 33; இவரது வீட்டருகே வசித்த கவுரி சங்கருடன் நெருங்கி பழகியுள்ளார்.
தந்தை கண்டித்ததால், கடந்த, 12ம் தேதி வேலைக்கு சென்றவர், கவுரி சங்கருடன் செல்வதாக தந்தையிடம் கூறிவிட்டு, மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். நிஜாமுதீன் புகாரின்படி
வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.