/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3 அரசு பள்ளி மாணவியர் உட்பட 4 பேர் மாயம்
/
3 அரசு பள்ளி மாணவியர் உட்பட 4 பேர் மாயம்
ADDED : செப் 02, 2024 02:32 AM
ஓசூர்: ஓசூரை சேர்ந்த, 15 வயது மாணவி, அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 28 மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், அசாம் மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நோகன் பாத்தா, 23, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சூளகிரியை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 30 மதியம், 1:00 மணிக்கு, வீட்டிலி-ருந்து சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது தாய், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த
புகாரில், சூளகிரி அருகே ராமாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சசி, 19, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, 15 வயது மாணவி, அரசு பள்-ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார்; கடந்த, 30 மாலை, 5:30 மணிக்கு வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை தேன்கனிக்-கோட்டை அனைத்து மகளிர்
ஸ்டேஷனில் கொடுத்த புகாரில், கக்-கதாசத்தை சேர்ந்த, 18 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.உத்தனப்பள்ளி அருகே கொடகரப்பள்ளியை சேர்ந்தவர் ஆர்த்தி, 23, தனியார் நிறுவன ஊழியர்; கடந்த, 29 மதியம், 2:00 மணிக்கு, அந்தேவனப்பள்ளியில் நடந்த, தன் தோழி திருமணத்திற்காக வெளியே புறப்பட்டு சென்றவர்
மாயமானார். அவரது தந்தை ராஜப்பா, 45, உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதில், தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளியை சேர்ந்த திவாகர், 24, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார்
விசாரித்து வருகின்றனர்.