/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக நலனுக்காக 3 நாள் மகா நவசண்டியாகம் துவக்கம்
/
உலக நலனுக்காக 3 நாள் மகா நவசண்டியாகம் துவக்கம்
ADDED : ஆக 10, 2024 07:19 AM
ஓசூர்: ஓசூர் மலைக்கோவிலில், உலக நலனுக்காக மூன்று நாள் மகா நவசண்டியாகம் நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், உலக நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி நீண்ட ஆயுள் பெறவும், 29 ம் ஆண்டு மகா நவசண்டியாகம் நேற்று துவங்கியது.
காலை, 10:30 மணிக்கு கணபதி ஹோமம், நண்பகல், 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை, 4:00 மணிக்கு, தேர்ப்பேட்டை பச்சைகுளத்தில் இருந்து நீர்க்குடம் புறப்படுதல், மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், வாஸ்து ஓமம், இரவு, 7:00 மணிக்கு கலசஸ்தாபனம், கலசபூஜை உட்பட பல்-வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று (ஆக., 10) காலை, 10:00 மணிக்கு முதற்கால மகா நவ-சண்டியாகம், இரவு, 7:00 மணிக்கு லட்சுமி ஹோமம், இரண்டாம் கால நவசண்டியாகம், நாளை (ஆக., 11) காலை, 9:00 மணிக்கு, மூன்றாம் கால நவசண்டியாகம், 11:30 மணிக்கு நவசண்டியாக விளக்கவுரை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்-கிறது. ஏற்பாடுகளை தேர்ப்பேட்டை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள்
செய்துள்ளனர்.

