/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கார் மரத்தில் மோதிய விபத்து மனைவி கண் முன்னே கணவர் பலி
/
கார் மரத்தில் மோதிய விபத்து மனைவி கண் முன்னே கணவர் பலி
கார் மரத்தில் மோதிய விபத்து மனைவி கண் முன்னே கணவர் பலி
கார் மரத்தில் மோதிய விபத்து மனைவி கண் முன்னே கணவர் பலி
ADDED : ஆக 31, 2024 01:06 AM
ஓசூர்: அஞ்செட்டி அருகே, கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், மனைவி கண் முன்னே கணவர் பலியானார்.
சேலம் நங்கவள்ளி தோப்பு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜூ, 66. இவரது மனைவி ராதா ருக்குமணி, 60. இவர்கள் கார்களில் துணிகளை ஏற்றி கொண்டு, பெங்களூரு, மைசூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய
பகுதிகளில் வியாபாரம் செய்து வந்தனர். கணவன், மனைவி இருவரும், தர்மபுரி, மைசூரு பகுதிகளில் துணி வியாபாரம் செய்ய நேற்று முன்தினம் மதியம் டாடா இண்டிகா காரில் புறப்பட்டனர்.
இரவு, 7:00 மணிக்கு, அஞ்செட்டி - நாட்றாம்பாளையம் சாலையில் உள்ள கத்திரிப்பள்ளம் அருகே வனப்பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி
விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி சென்ற கோவிந்தராஜூ, சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ராதா ருக்குமணி, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் விசாரிக்கிறார்.