/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.66.87 லட்சம் மோசடி
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.66.87 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 06, 2024 08:25 AM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் லாபத்துடன் முதலீட்டு தொகை கிடைக்கும் எனக்கூறி, 66.87 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகரை சேர்ந்தவர் சுதாகர், 46, தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த ஏப்.,3ல் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. அதில், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும்.
உங்களுக்கு பணம் தேவைப்படும் போது, அதை விற்றால் லாபத்துடன் உங்கள் முதலீட்டு தொகை உங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி அந்த இணையதளம் மூலம், தன் விபரங்களை பதிவு செய்த சுதாகர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது. இதையடுத்து சுதாகர் தன்னிடமிருந்த, 66 லட்சத்து, 87 ஆயிரத்து, 500 ரூபாயை அனுப்பினார். ஆனால் அதன் பின் அந்த இணையதள பக்கம் முடங்கியது. சுதாகரை தொடர்பு கொண்ட வாட்ஸ் ஆப் எண்களும் 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதாகர், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.