/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் ஊழியரிடம் ரூ.18.65 லட்சம் மோசடி
/
தனியார் ஊழியரிடம் ரூ.18.65 லட்சம் மோசடி
ADDED : ஆக 19, 2024 12:28 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி மேல்புதுாரை சேர்ந்தவர் ரமேஷ், 36, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மொபைல்போ-னுக்கு கடந்த மாதம், 3ல் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்றும், அதற்கான லிங்கும் அனுப்பப்பட்டிருந்தது.
அதிக பணத்-திற்கு ஆசைப்பட்ட ரமேஷ், அந்த லிங்கில் இருந்த வங்கிக்கணக்-கிற்கு, 18.65 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன்பின் அவ-ருக்கு எந்த பணமும் வராததால், அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்-டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரிக்கிறார்.

