/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விநாயகர் சதுர்த்தி விழா களிமண் சிலை விற்பனை ஜோர்
/
விநாயகர் சதுர்த்தி விழா களிமண் சிலை விற்பனை ஜோர்
ADDED : செப் 07, 2024 07:38 AM
கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, களிமண் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
இன்று (செப். 7) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டை, புதுப்பேட்டை ரவுண்டானா பகுதியில், அரை அடி முதல், 5 அடி வரை களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள், 70 முதல், 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சாக்பீஸ் மாவினால் செய்யப்பட்ட ஒன்றரை அடி விநாயகர் சிலை, 2,500 ரூபாய்க்கும், இரண்டரை அடி, 3,500 ரூபாய்க்கும் விற்பனை செய்தனர்.
விநாயகர் சிலைக்கு வைக்கும் குடை, 30 முதல், 120 ரூபாய் வரை விற்பனையானது. மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தேவையான ஆப்பிள், ஆரஞ்சு, சீத்தாபழம், கொய்யாப் பழம், பேரிக்காய், வாழைப்பழம், வாழை மரம், எருக்கம்பூ மற்றும் அருகம்புல் மாலை போன்றவையும் அதிகளவில் விற்பனைக்காக தள்ளுவண்டி, சாலையோரங்களில் வைத்திருந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்காக, பொதுமக்கள் பூஜை பொருட்களை வாங்க ஆர்வத்துடன் குவிந்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ குண்டு மல்லி பூக்கள், 400 முதல், 500 ரூபாய்க்கு விற்ற நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண நிகழ்ச்சியையொட்டி நேற்று, 800 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்தது.