/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நவீன சலவையகம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு
/
நவீன சலவையகம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 08, 2024 05:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்ப-டுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்-பாட்டிற்காக, நவீன சலவையகங்கள் அமைக்க, 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக இருக்க வேண்டும்.
இக்குழுவிற்கு சலவையகம் அமைக்க தேவையான உபகர-ணங்கள் வாங்க, 3 லட்சம் ரூபாய் வழங்கப் படுகிறது. இத்தொ-ழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிகப்பிற்-பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்த, 10 நபர்கள் கொண்ட குழுவாக, மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு-பான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்-பங்களை பெறலாம்.
இதில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது, 20 ஆக இருக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். குழுவிலுள்ள, 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும். பயனா-ளிகளின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாயக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.