நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் - தொங்கனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அடிபட்டு இறந்து கிடந்தார்.
இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. ரயில் பாதையை கடக்கும்போது, ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, மொரப்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.