/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதால் 3 மருத்துவமனைகளை மூட 'நோட்டீஸ்'
/
சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதால் 3 மருத்துவமனைகளை மூட 'நோட்டீஸ்'
சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதால் 3 மருத்துவமனைகளை மூட 'நோட்டீஸ்'
சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதால் 3 மருத்துவமனைகளை மூட 'நோட்டீஸ்'
ADDED : மார் 02, 2025 06:59 AM
சேலம்: சென்னை சுகாதாரப்பணி இணை(சட்டப்பிரிவு) இயக்குனர் மீனாட்சிசுந்தரி தலைமையில் சேலம் இணை இயக்குனர் நந்தனி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் சவுண்டம்மாள், யோகானந்த், மாநகர் நல அலுவலர் முரளிசங்கர் உள்ளிட்டோர், நேற்று முன்-தினம் சேலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல்வேறு விதி-மீறல்கள் கண்டறியப்பட்டு, ஏராளமான ஆவணங்களை கைப்பற்-றினர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: பொன்னம்மா-பேட்டையில், ஸ்கேன் சென்டருடன் கூடிய மருத்துவமனை, கருக்கலைப்புக்கு அனுமதி பெற்று, சட்டத்துக்கு புறம்பாக கருக்க-லைப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அதேபோல் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகே உள்ள மருத்துவமனை, அனுமதியின்றி கருக்கலைப்பு செய்துள்ளது. இரு மருத்துவமனைகளிலும் பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்-பது, மருத்துவ குழு ஆய்வில் தெரியவந்தது. தவிர, சேலம், அழ-காபுரம், பெரியபுதுாரில் உரிமமின்றி வீட்டுக்குள் மருத்துவமனை நடத்தி, பிரசவம் பார்ப்பதோடு, சட்டவிரோதமாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைய-டுத்து, 3 மருத்துவமனைகளையும் உடனே மூட, சேலம் இணை இயக்குனர் நந்தினி, 'நோட்டீஸ்' வழங்கி உத்தரவிட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பின், அதில் முறைகேடு தெரியவந்தால், மேல் நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.