/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., சார்பில் பேச்சு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
/
தி.மு.க., சார்பில் பேச்சு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
தி.மு.க., சார்பில் பேச்சு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
தி.மு.க., சார்பில் பேச்சு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஆக 26, 2024 08:27 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'என் உயிரினும் மேலான' என்ற பெயரில் பல்வேறு தலைப்புகளில், ஓசூரில் நேற்று பேச்சு போட்டி நடத்தப்பட்டது. ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் படிக்கும், 92 மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர்.
ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், ஈரோடு எம்.பி., பிரகாஷ் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். நெல்லிகுப்பம் புகழேந்தி, வக்கீல் சரவணன், நாகை சாகுல்ஹமீது, குத்தாலம் அன்பழகன், பொள்ளாச்சி சித்திக், சேர்க்காடு கென்னடி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலா, 10,000 ரூபாய் வழங்கப்பட்டதுடன், மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தலா, 1,000 ரூபாய் மற்றும் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்ட சான்றிதழ்கள், கேடயம் வழங்கப்பட்டது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணகிரியில், மாவட்ட இளைஞர், தி.மு.க., சார்பில் நடந்த, பேச்சு போட்டி, கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் தலைமையில் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் வரவேற்றார். தி.மு.க., அமைப்பு துணை செயலாளர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., டாக்டர் யாழினி, சவுமியன், ஈரோடு இறைவன், சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.பி., சுகவனம், மாநில விவசாய அணி தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் கதிரவன், நகர செயலாளர் நவாப் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.