/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கல்
ADDED : பிப் 25, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்-திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 274 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3,000 ரூபாய் வீதம், 4 பேருக்கு, 12,000 ரூபாய் மதிப்பில் காதொலி கரு-விகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சி-யரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தர்ராஜ், மாவட்ட ஆதிதிரா-விடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.