/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது
/
ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது
ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது
ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது
ADDED : ஜூலை 06, 2024 08:26 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில், தனியார் கட்டடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்குகிறது.
இங்கு ஏ.டி.எம்., மையமும் உள்ளது. வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையத்திற்கு தனியாக காவலாளி நிய-மிக்கப்படவில்லை. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுப்பது போல் உள்ளே நுழைந்து, அங்கிருந்த இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்-றனர். சத்தம் கேட்டு எழுந்த தனியார் கட்டட காவலாளி நந்தீஷ், 29, வெளியே வந்து பார்த்தார். இதை கவனித்த மர்ம நபர்கள், பைக்கில் தப்பி சென்றனர். சரியான நேரத்திற்கு காவலாளி வந்-ததால், ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.