/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்
/
பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 12, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர, பா.ஜ., தெற்கு மண்டல் சார்பில், 43வது வார்டுக்கு உட்பட்ட குருபட்டி பகுதியில், மும்-மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, முன்னாள் மாநகர தலைவர் நாகேந்திரா தலைமையில், மாணவ, மாணவியரின் கையெழுத்து இயக்கம் நடந்தது.
நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டு, மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். மண்டல தலைவர் கோபி, முன்னாள் நிர்வாகிகள் சுந்தர், வெங்கட்ரமணா, முனி-யப்பன், விஜி, ராமச்சந்திரன், வருண், சிவராஜ் உட்பட பலர் பங்-கேற்றனர்.