/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 03, 2024 07:57 AM
பாலக்கோடு : பாலக்கோடு பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் முத்து முன்னிலை வகித்தார். இதில் துாய்மை பணியாளர்களுக்கு, கண் சிகிச்சை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தோல் நோய், மூட்டு வலி, கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்து பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து, பாதிப்பிலிருந்த துாய்மை பனியாளர்களுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர் மற்றும் 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.