/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.67.59 லட்சம் மதிப்பிலான தார்ச்சாலை பணிகள் துவக்கம்
/
ரூ.67.59 லட்சம் மதிப்பிலான தார்ச்சாலை பணிகள் துவக்கம்
ரூ.67.59 லட்சம் மதிப்பிலான தார்ச்சாலை பணிகள் துவக்கம்
ரூ.67.59 லட்சம் மதிப்பிலான தார்ச்சாலை பணிகள் துவக்கம்
ADDED : ஆக 19, 2024 12:31 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி பஞ்., கிட்டம்பட்டி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை முதல், அகசிப்பள்ளி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி வரை, 2,100 மீட்டர் தொலைவிற்கு, முதல்-வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், 2024 - 2025ம் ஆண்டு நிதி, 67.59 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, அ.தி.மு.க.,
எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து நேற்று காலை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்-னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, பஞ்., தலைவர் நாராயணன், ஐ.டி.,பிரிவு வேலன், தேவசமுத்திரம் பஞ்., துணைத்தலைவர் திம்மராயன், மாவட்ட வர்த்தகப்பிரிவு இணை செயலாளர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.