/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தக்காளிக்கு போதிய விலை இல்லை சாலையோரம் கொட்டி சென்ற விவசாயி
/
தக்காளிக்கு போதிய விலை இல்லை சாலையோரம் கொட்டி சென்ற விவசாயி
தக்காளிக்கு போதிய விலை இல்லை சாலையோரம் கொட்டி சென்ற விவசாயி
தக்காளிக்கு போதிய விலை இல்லை சாலையோரம் கொட்டி சென்ற விவசாயி
ADDED : ஆக 10, 2024 07:24 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, தக்காளியை விவசாயி சாலை-யோரம் கொட்டி சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கொண்டாரெட்டி; 10 ஏக்கர் நிலத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தக்காளி சாகுபடி செய்துள்ளார்.
தக்காளி விலை கடந்த மாதம் அதிகமாக இருந்தது. 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி, 1,750 முதல், 2,000 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டது.
இம்மாதம் விலை படிப்படியாக சரிந்து வருகிறது. விளைச்சல் அதிகரிப்பு மற்றும் வெளிமாநில தக்காளி வரத்து காரணமாக விலை சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிரேடு தக்காளி தற்போது, 200 ரூபாய் வரை மட்டுமே வாங்கப்படுகிறது. பறிப்பு கூலி, வாகன செலவிற்கு கூட இது போதியதாக இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகளிடம் இருந்து கிலோ, 8 ரூபாய் வரை
மட்டுமே தக்காளிகளை வியாபாரிகள் வாங்குகின்றனர். வெளிச்-சந்தையில், 15 முதல், 20 ரூபாய்
வரை தக்காளி விற்பனை செய்கின்றனர். போதிய விலை இல்-லாத காரணத்தால், கொண்டாரெட்டி, தன் தோட்டத்தில் விளைந்த தக்காளியை பறித்து சாலையோரம்
கொட்டியுள்ளார்.
மேலும், பல ஏக்கரில் தக்காளியை பறிக்காமல் செடிகளில் விட்-டுள்ளார்.