/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய விண்ணரசி அன்னை ஆலய தேர்த்திருவிழா
/
துாய விண்ணரசி அன்னை ஆலய தேர்த்திருவிழா
ADDED : ஆக 20, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள துாய விண்ணரசி அன்னை ஆலயத்தின், 46ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 11ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையில் தேர்த்திருவிழா வாணவேடிக்கையுடன் நடந்தது. முன்னதாக, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது.
அன்னையில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை, அருட்தந்தை இருதயநாதன் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தேர்பவனியையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.