ADDED : ஜூலை 13, 2011 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சிக்கபூவத்தியில், பள்ளி மாணவ
மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
ஆசிரியர்
முருகன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை
அமைச்சர் முனுசாமி, மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி
பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., முனிவெங்கடப்பன் மற்றும் சிக்கபூவத்தி
பஞ்சாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பள்ளி மாணவ மாணவியர் மற்றும்
பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

