நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை, மகா முனியப்பன் கோவில் அருகாமையில், கொங்கு பாரம்பரிய அழகு வள்ளி கும்மியாட்டம் நேற்று முன் தினம் இரவு நடந்தது.
இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமியர் நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடனமாடினர். அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக, கொங்கு இளைஞர் பேரவை சார்பில் பல்வேறு இடங்களில் அழகு வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.தமிழ் கடவுளான முருகனை, நாடோடி இனத்தில் பிறந்த வள்ளி திருமணம் செய்த கதையை பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி, நடனம் ஆடியதை சுற்றுவட்டார பகுதி மக்கள் பார்த்து ரசித்தனர்.

