/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திரவுபதியம்மன் மஹாபாரத பெருவிழா
/
திரவுபதியம்மன் மஹாபாரத பெருவிழா
ADDED : ஏப் 03, 2025 02:03 AM
திரவுபதியம்மன் மஹாபாரத பெருவிழா
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, செல்லகுட்டப்பட்டி கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் மஹா பாரத பெருவிழாவும், அதேபோல் அதே பகுதியில் உள்ள வடுகாத்தம்மன் கோவில்களில் நேற்று குலதெய்வ வழிபாடு மற்றும் பொதுமக்கள் வழிபாடு நடந்தது.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை
உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 20,000க்கும் மேற்பட்ட, 41 கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில் வடுகாத்தம்மன் கோவிலில், 5,000க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி சமையல் செய்து உறவினர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. அதேபோல், திரவுபதியம்மன் கோவில் மஹாபாரத பெருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கிச்சடி, உப்புமா உள்ளிட்ட சைவ உணவு வழங்கப்பட்டது. பாரூர் போலீசார், 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

