ADDED : ஏப் 09, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய நெடுஞ்சாலையோரம் தீ
பர்கூர்:பர்கூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்கள் வெயிலால் வாடி உள்ளது. பர்கூர் அடுத்த காரகுப்பம் மேம்பாலத்தின் பக்கவாட்டில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புல்வெளியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

