ADDED : மே 20, 2025 02:13 AM
ஓசூர்,சூர், வட்டார வேளாண் துறை அட்மா திட்டம் சார்பில், இடையநல்லுார் கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி நடந்தது. ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, துவரை சாகுபடி தொழில்நுட்பங்
கள், வரப்பு பயிர், ஊடுபயிர் செய்வதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.அதியமான் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் ஞானகீர்த்தி, துவரையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் நீம் அஸ்திரா தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் குறித்து எடுத்துரைத்தார். ஓசூர் வேளாண் அலுவலர் ரேணுகா, உதவி வேளாண் அலுவலர் சுந்தர்ராஜ், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் ஆகியோர், பல்வேறு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர் காவியா செய்திருந்தார்.