/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை
/
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை
ADDED : ஜூலை 10, 2025 01:03 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில், அட்மா திட்டம் மூலம், விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, விதை நேர்த்தியின் நன்மைகள், இயற்கை விவசாயத்தின் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். ஓசூர் வேளாண் அலுவலர் தென்றல், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்களின் பயன்கள், சொட்டு நீர் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
துணை வேளாண் அலுவலர் முருகேசன், கோடை உழவின் முக்கியத்துவம் பற்றியும், உதவி தோட்டக்கலை அலுவலர் திருவேங்கடம், பசுமைக்குடில் அமைப்பதின் பயன்கள் குறித்தும், உதவி பொறியாளர் இந்துமதி, வேளாண் இயந்திரங்களின் வாடகை விபரங்கள் பற்றியும், பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் நவீன்குமார், மல்பெரியில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்ப முறைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.
உதவி வேளாண் அலுவலர் சத்தியமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர்கள் ஆறுமுகம், வெங்கடேஷ், கோவிந்தசாமி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா
உட்பட பலர் பங்கேற்றனர்.

