ADDED : ஆக 31, 2025 04:08 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் அடுத்த பேரிகையில் ஆண்டுதோறும் விநாயகர் சிலை
ஊர்வலம் வெகு விமர்சையாக நடக்கும். பள்ளிவாசல்கள் மிகுந்த சாலை
வழியாக செல்லும் விநாயகர் ஊர்வலத்தில் மதநல்லிணக்கத்தை
வலியுறுத்தும் விதமாக, இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அதன்படி நடந்த விநாயகர் ஊர்வலத்தின்போது பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள்
அன்னதானம்
வழங்கினர். கேரளா செண்டமேளம், பம்பை, திண்டுக்கல் தப்பாட்டம்,
வேலுார் டிரம்ஸ், கேரளா இசைக்கருவிகள் முழங்க, இஸ்லாமியர்களின் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
பேரிகையின்
முக்கிய வீதிகளில், ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் சேர்ந்து
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கொண்டாடியது நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியது. அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்களுக்கு,
தி.மு.க., ஒன்றிய செயலாளர் நாகேஷ் நன்றி தெரிவித்தார்.

