நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக, ஸ்டேஷன் மாஸ்டர் வினோத்குமார் சிங், ரயில்வே போலீசில் நேற்று மதியம் புகார் செய்தார்.
போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது, வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரிந்தது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. ஓசூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.'

