/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மீது தாக்குதல்
/
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மீது தாக்குதல்
ADDED : ஜன 29, 2025 01:08 AM
100 நாள் வேலை திட்ட  பணியாளர்கள் மீது தாக்குதல்
போச்சம்பள்ளி :  கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அடுத்த, வெப்பாலம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, தொப்படிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சுளா, 40, அம்சா, 35, இருவரும், 100 நாள் வேலை திட்டத்தில், நேற்று முன்தினம் பணிக்கு  சென்றனர். கடந்த, 23ம் தேதி முதல் நேற்று வரை, 4 நாட்கள் வேலை செய்து வந்த நிலையில், இவர்களின் பணிக்கான வருகை பதிவேட்டில் பதிவு செய்யாமல், பணிதள பொறுப்பாளரான சுசீலா இருந்துள்ளார். மஞ்சுளா, அம்சா இருவரும், 'ஏன் எங்கள் பெயரை, வருகை பதிவேட்டில் பதிவு செய்யாமல் உள்ளது' என கேள்வி எழுப்பி, இது குறித்து புகார் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.  ஆத்திரமடைந்த சுசீலா, தன் கணவர் சண்முகம் மற்றும் மகன் சச்சினிடம் தெரிவித்துள்ளார். அங்கு வந்த சண்முகம், சச்சின் இருவரும் சேர்ந்து மஞ்சுளா, அம்சா இருவரையும் தாக்கினர். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து பர்கூர் பி.டி.ஓ., செந்திலிடம் கேட்டதற்கு, 'இதுசம்பந்தமான புகார் வந்துள்ளதாகவும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் தெரிவித்தார்.

