ADDED : பிப் 20, 2025 01:37 AM
ரூ.10.94 கோடியில் திட்ட பணி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் சோக்காடி, அகசிப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி, பெரிய முத்துார் ஆகிய ஊராட்சிகளில், 3.47 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.
கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து மத்துார், ஊத்தங்கரை ஒன்றியங்களில், 7.47 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடந்தது-. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

